Breaking News

சதீஷுடன் இணைந்த யுவன் சங்கர் ராஜா!

 


இயக்குனர் சிம்பு தேவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கான்ஜூரிங் கண்ணப்பன்'.இந்த படத்தில் சதீஷ் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், நாசர், சரண்யா பொன்வண்ணன், ஆனந்த்ராஜ், ரெஜினா கசன்ட்ரா, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லீ மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


திகில், ஃபான்டசி கலந்த திரைப்படமாக உருவாகும் இப்படத்தினை ஏஜிஎஸ் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பெரும் பொருட்செலவில் பழங்கால அரங்குகள் அமைத்து நடத்தப்படுகிறது.

இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'கான்ஜூரிங் கண்ணப்பன்' திரைப்படத்தின் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா இணைந்துள்ளார். இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.