சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் மாற்றம் !
சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி சம்பா அரிசி ஒரு கிலோ கிராமின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டு 222 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடலை ஒரு கிலோ கிராமின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டு 549 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.
பருப்பு கிலோ கிராமின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டு 295 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேநேரம் சிவப்பு அரிசி ஒரு கிலோ கிராமின் விலை 3 ரூபாவால் குறைக்கப்பட்டு 169 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.