Breaking News

நகைகளை திருடுவதற்காக சிலை போல் நின்று நடித்த வாலிபர்!

 


போலந்து தலைநகர் வார்சா பகுதியில் ஒரு வணிக வளாகத்தில் உள்ள கடை முன்பு சிலை போல் நின்ற ஒரு வாலிபரின் நடவடிக்கைகள் அங்குள்ள பாதுகாப்பு ஊழியர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அந்த வாலிபர் கடையின் ஜன்னலுக்கு பின்னால் ஒரு பையை வைத்துக் கொண்டு நின்றுள்ளார். அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் அருகில் சென்ற போது அந்த வாலிபர் தனது உடைகளை மாற்றிக்கொண்டு அங்குள்ள கடை முன்பு அமைக்கப்பட்டிருக்கும் சிலைகளுக்கு மத்தியில் தானும் சிலை போலவே நின்று நடித்துள்ளார்.

எனினும் அவரை பிடித்து விசாரித்த போது அவர் அங்குள்ள ஒரு நகைக்கடையில் நகைகளை திருடுவதற்கு திட்டமிட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் மற்றொரு வணிக வளாகத்தில் பொருட்களை திருடியதும் தெரியவந்தது.