Breaking News

திடீரென அதிகரித்த தங்கத்தின் விலை!

 


இலங்கையில் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தங்க சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.

அதன்படி, இன்று (09) கொழும்பு செட்டியார் வீதி தங்க சந்தையில் ஒரு பவுன் "22 கெரட்" தங்கத்தின் விலை 2,000 ரூபாவால் அதிகரித்துள்ளதுடன், அதன் புதிய விலை ரூபா. 155,400 ஆக காணப்படுகிறது.

கடந்த புதன்கிழமை அதன் விலை  152,200 ரூபாவாக காணப்பட்டது.

இதற்கிடையில், கடந்த வாரம் புதன்கிழமை 164,500, ரூபாவாக நிலவிய ஒரு பவுன் "24 கேரட்" தங்கத்தின் விலை தற்போது 168,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் வீதி  தங்க சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.