மத்திய கிழக்கிலுள்ள இலங்கையர்களுக்கு விசேட அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிவிப்பு!
மத்திய கிழக்கில் வசிக்கும் இலங்கை பிரஜைகளுக்காக இரண்டு அவசர தொலைபேசி இலக்கங்களை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
0094711 757 536, 0094711 466 585 ஆகிய இரண்டு தொலைபேசி இலக்கங்களை மூலம் மத்திய கிழக்கின் தற்போதைய மோதல் நிலைமை தொடர்பில் இலங்கையர்கள் அவசர உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும்.
இதற்கு மேலதிகமாக வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவை வழக்கமான அலுவலக நேரங்களில் 1094 112 338 837 என்ற தொலைபேசி எண் மற்றும் சநியவசயைவழைn.உழளெரடயசளூஅகய.பழஎ.டம மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம் என வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
அத்துடன், இஸ்ரேலில் உள்ள அனைத்து இலங்கையர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், மோதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறும், ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், (இஸ்ரேல்) மற்றும் (பலஸ்தீனம்) ஆகிய இடங்களில் உள்ள இலங்கை தூதரகங்களுடன் தொடர்ந்து தொடர்பு கொள்ளுமாறும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.