டில்லியில் உலகின் பிரமாண்ட நடராஜர் சிலை ஸ்தாபிப்பு!
இந்தியாவின் டெல்லியில் `ஜி20' மாநாடு நடைபெறவிருக்கும் பாரத் மண்டபத்தின் முகப்பில் தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலையில் செய்யப்பட்ட உலகின் பெரிய நடராஜர் சிலை வைக்கப்பட்டிருக்கிறது.
டெல்லியில் `ஜி20' மாநாடு நடைபெறவிருக்கும் பாரத் மண்டபத்தின் முகப்பில் தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலையில் செய்யப்பட்ட உலகின் பெரிய நடராஜர் சிலை வைக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து இந்திய பிரதமர் மோடி, ``பாரத மண்டபத்தில் நிறுவப்பட்டிருக்கும் பிரமாண்டமான நடராஜர் சிலை, நமது வளமான கலாசாரம் மற்றும் வரலாற்றின் கூறுகளை கண்முன்னே நிறுத்துகிறது. `ஜி20' உச்சி மாநாட்டுக்காக உலக நாடுகள் ஒன்று கூடும்போது, இது இந்தியாவின் பழங்கால கலைத்திறன், பாரம்பர்யங்களுக்கு ஒரு சான்றாக அமையும்" என தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
இது தமிழ்நாட்டுக்குக் கிடைத்திருக்கும் பெருமை' என சிலையை வடிவமைத்த ஸ்தபதி நெகிழ்ந்திருக்கிறார். டெல்லியில் வரும் 9, 10 ஆகிய திகதிகளில் `ஜி20' மாநாடு நடக்கவிருக்கிறது.
சிலையின் பிரமாண்டம் உள்ளிட்டவை பலரையும் கவர்ந்திருக்கும் நிலையில், இந்திய பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், நடராஜர் சிலை குறித்துப் பதிவிட்டிருப்பது பலரது கவனத்தையும் பெற்றிருக்கிறது.