16 வயது மாணவி கடத்தப்பட்டு பாகிஸ்தான் கொண்டு செல்லப்படார்(காணொளி)
அண்மையில் இடம்பெற்ற ஈஸ்ரர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே இந்த சம்பவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
சகரானுடன் தொடர்புடைய ஒரு மதமாற்ற குழுவை சேர்ந்தவரை சந்தித்ததாகவும் அவரோடு உரையாடியபோது, யாழ்ப்பாணம் வந்து 16 வயதுடைய யாழ் வேம்படி பாடசாலை மாணவியை கடத்திச்சென்றதாகவும் பின்னர் பொலிசார் தேடியவேளை அந்த மாணவியை பள்ளிவாசலிடம் ஒப்படைத்து அவர் பாகிஸ்தான் அனுப்பப்பட்டதாகவும் அங்கே ஆறுமாதங்கள் தங்க வைக்கப்பட்டு மதம்மாற்றப்பட்டு இலங்கை வந்தபின் அவரை திருமணம் முடித்தாகவும் அந்த முஸ்லீம் இளைஞர் தகவல் வழங்கியிருக்கிறார்.
அந்த கடத்தப்பட்ட பிள்ளை யார் அவரது பெற்றோருக்கு அந்த தகவல் தெரியுமா? என்ற விடயங்களை யாழ் மனிதஉரிமை அலுவலகத்தோடு தொடர்புடையவர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு சகரானுடன் தொடர்புடைய பல மத அடிப்படைவாதிகள் தற்போதும் பிணையில் வெளியேவந்து மட்டக்களப்பில் இருப்பதாகவும் தெரிவித்த பிள்ளையான் மேலும் பல விடயங்களை வெளிப்படுத்தியிருக்கிறார் பிள்ளையான்.
முழுமையான பேட்டி