விஜய் பட இயக்குனர் சித்திக் காலமானார்!
மலையாள இயக்குனரான சித்திக் கடந்த சில ஆண்டுகளாக கல்லீரல் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார். நோய் தீவிரமடைந்ததையடுத்து கடந்த மாதம் கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதால் எக்மோ கருவி பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது.
இயக்குனர் சித்திக் விரைவில் குணமடைய வேண்டும் என பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சித்திக் நேற்று இரவு தனது 63 வது வயதில் உயிரிழந்துள்ளார்.
அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்தவண்ணம் உள்ளனர். இயக்குனர் சித்திக் தமிழில் விஜய்- சூர்யா நடிப்பில் வெளியான 'பிரண்ட்ஸ்' திரைப்படத்தை இயக்கியிருந்தார். மேலும், 'சாது மிரண்டா', 'காவலன்' படத்தையும் இயக்கியுள்ளார்.