Breaking News

நாட்டின் வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை!

 

கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாடளாவிய ரீதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக மழையுடனான வானிலையில் நாளை (01)  அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, மேல், சப்ரகமுவ, தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுரேலியா மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக் கூடும் என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.