Breaking News

பிரபல நடிகரின் மகளை திருமணம் செய்யும் அசோக் செல்வன்!

 


தமிழில் சூதுகவ்வும் படத்தில் அறிமுகமாகி வித்தியாசமான கதைகளில் நடித்து வரும் அசோக் செல்வனுக்கு 'ஓ மை கடவுளே' திருப்புமுனை படமாக அமைந்து. 

இதைத்தொடர்ந்து இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'போர் தொழில்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நடிகர் அசோக் செல்வன் பிரபல நடிகையை காதலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அதாவது, அசோக் செல்வன், நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியனை காதலித்து வருவதாகவும் இவர்கள் திருமணம் செப்டம்பர் 13-ஆம் தேதி நெல்லையில் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன்பு ஒரு நேர்காணலில் அசோக் செல்வன் வீட்டில் பார்த்து வைக்கும் திருமணம் என் குணத்திற்கு செட்டாகாது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.