Breaking News

ஆயிரக்கணக்கான வைத்தியர்கள் நாட்டை விட்டு வௌியேறும் அபாயம்!

 


வெளிநாடுகளில் பணியாற்றுவதற்கு தகுதி பெற்ற 5000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் அபாயம் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலைமையை தவிர்க்க அரசாங்கம் அவசர வேலைத்திட்டமொன்றை தயாரிக்க வேண்டும் என அதன் பேச்சாளர் வைத்தியர் கலாநிதி சமில் விஜேசிங்க குறிப்பிடுகின்றார்.

“வேலை கிடைத்தவுடன் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற நோக்கத்தில் வெளிநாடுகளில் மருத்துவப் பணிக்குத் தேவையான கல்வியை முடித்த 5,000 மருத்துவர்கள் உள்ளனர். இது பாரதூரமான விடயம். 5,000 பேர் என்பது நாட்டில் உள்ள மருத்துவர்களில் நான்கில் ஒரு பங்காகும். இந்த பிரச்சனையின் தீவிரம் எதிர்காலத்தில் அதிகரிக்கும். இதற்கான அடிப்படை காரணங்களை கண்டறிந்து மருத்துவர்களுக்கு  தேவையான திட்டத்தை சுகாதார அமைச்சு செயல்படுத்த வேண்டும்." என்றார்.

பயிற்சியின் பின்னரான நியமனங்களைப் பெற்ற 250 இற்கும் மேற்பட்ட வைத்தியர்கள் துறையிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளதாகவும் வைத்தியர் சமில் விஜேசிங்க மேலும் தெரிவித்தார்.