வெற்றிகரமாக நிலவில் தடம் பதித்த சந்திராயன் 3 !
இந்தியாவின் ‘சந்திரயான்-3’ விண்கலத்தின் விக்ரம் லேண்டர் சந்திரனின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
சந்திரயான்-3 லேண்டர் நிலவில் தரையிறங்கும் நிகழ்வை, தென் ஆப்பிரிக்காவில் இருந்து பிரதமர் மோடி நேரலையில் பார்த்த அவர் பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
நிலவின் தென் துருவத்தில், இதுவரை யாரும் ஆய்வு செய்யாத இடத்தில், தடம் பதிக்க இந்தியா முயற்சி மேற்கொண்டு, கடந்த மாதம் கடந்த மாதம் 14 ஆம் திகதி சந்திரயான்-3 விண்கலம் அனுப்பப்பட்டது.
பூமிக்கும், நிலவுக்கும் இடையேயுள்ள 3 லட்சத்து 84 ஆயிரம் கி.மீ. தொலைவை 40 நாட்கள் பயணித்து கடக்கும் திட்டத்துடன் புறப்பட்ட சந்திரயான்-3, முதலில் புவி வட்டப்பாதையில் பல்வேறு நிலைகளில் சுற்றிவந்து, பிறகு நிலவு நோக்கி பயணித்து, அதன் வட்டப்பாதைக்கு மாற்றப்பட்டது.
நிலவு வட்டப்பாதையில் சுற்றி கொண்டிருக்கும் சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள உந்து கலனில் இருந்து லேண்டர் கருவி வெளியே கொண்டுவரப்பட்டு, அதே வட்டப்பாதையில் சுற்றிக்கொண்டே நிலவை நெருங்கி சென்றது.
இந்நிலையில் தற்போது விக்ரம் லேண்டர் சந்திரனின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.