13ம் திருத்த ஆளுநரை விஞ்சும் அமைச்சரின் அதிகாரம்
திருகோணமலை பொரலுகந்த ராஜமகா விகாரை கட்டுமான பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது விகாரை நிர்மாண பணிகளை இடைநிறுத்திய ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களின் உத்தரவு செல்லாது என அமைச்சர் விதுர விக்ரமநாயக்க பாராளமன்றத்தில் அறிவித்ததன் பிரகாரம் அனுமதி இன்று வழங்கப்பட்டு இருக்கின்றது.
அதாவது, மாகாண ஆளுநரின் அறிவித்தலின் அடிப்படையில் பிரதேச செயலாளர் பொன்னையா தனேஸ்வரன் கட்டுமான பணிகளுக்கு எதிராக பிறப்பித்த தடையுத்தரவு இன்று மீள பெறப்பட்டு இருக்கின்றது
இதன் பிரகாரம் கட்டுமான பணிகள் சுகித வன்சதிஸ்ஸ தேரர் தலைமையில் ஆரம்பிக்கப்பட இருக்கின்றன
13 ஆம் திருத்த சட்டத்தின் வழியான மாகாணசபையின் ஆளுநர் மாகாணசபையில் பரம்பொருளுக்கு நிகரான அதிகாரத்தை கொண்டு இருக்கின்றார்.
மேற்படி ஆளுநர் ஒருவரின் உத்தரவை கூட மத்திய ஒற்றையாட்சி அரசின் அமைச்சர் நிராகரித்து பௌத்த மத கட்டுமானத்திற்கு அனுமதி வழங்கி இருக்கின்றார்
ஆனால் நிறைவேற்றுத் துறை அதிகாரங்கள் எதுவுமில்லாத மாகாணசபை முதலமைச்சர் ஊடக தமிழர்களின் இருப்பை பாதுகாக்கலாம் என நம்பி கொண்டு இருக்கின்றோம்
ஆதாவது கிராம சேவையாளர் ஒருவருக்கு கூட கட்டளை இடும் அதிகாரம் கூட இல்லாத மாகாணசபை மூலம் பௌத்த மயமாக்கல் , சிங்கள குடியேற்றங்கள் மட்டுமியின்றி காணிகளை பாதுகாக்க முடியும் நம்ப வைக்கப்பட்டு இருக்கின்றோம்.
தொடர்புடைய செய்தி