சிக்கலில் முக்கிய நடிகர்கள்.. தயாரிப்பாளர் சங்கம் அதிரடி!
தமிழில் முன்னணி நடிகர்களான விஜய் சேதுபதி, விஷால், சிம்பு, யோகி பாபு, அதர்வா, எஸ்.ஜே.சூர்யா போன்ற நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாக சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், இன்று அந்த நடிகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது குறித்து நடிகர் சங்கம் நிர்வாகிகள், தயாரிப்பாளர் சங்கத்துடன் இணைந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இதில் நடிகர் சங்க முக்கிய நிர்வாகிகள் மற்றும் தயாரிப்பாளர் சங்க முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த பேச்சு வார்த்தையானது சென்னை அண்ணா சாலையில் உள்ள தயாரிப்பாளர் சங்கத்தில் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பிரச்சினை செய்து வரும் நடிகர்களால் தயாரிப்பாளர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டு நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும், தொடர்ந்து தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்காத நடிகர்களுக்கு ரெட் கார்டு வழங்கப்படவுள்ளதாகவும் தயாரிப்பாளர் தரப்பில் கோரிக்கைகள் வைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.