Breaking News

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி குறித்து வெளியான அறிக்கை!

 


முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் பகுதியில் கடந்த வாரம் அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் இன்று முன்னெடுக்கப்பட்ட மேலதிக அகழ்வு பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

குறித்த மனிதப் புதைகுழி தொடர்பில் எதிர்வரும் 13.07.2023 (வியாழக்கிழமை) அன்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் அகழ்வுப்பணிகளுடன் தொடர்புடைய திணைக்களங்கள் மற்றும், அமைப்புக்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளவுள்ளதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேற்படி கலந்துரையாடலைத் தொடர்ந்தே அகழ்வுப் பணிகள் தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் பகுதியில் கடந்தவாரம் விடுதலைப்புலிகளின் சீருடையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற ஆடைகள் மற்றும் எச்சங்கள் தொடர்பிலான மேலதிக அகழ்வு பணிகள் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் மேலும் பல எலும்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதேநேரம் பிளாஸ்ரிக் பொருள், வயர் உள்ளிட்ட சில சான்று பொருட்களும் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

மேலதிக அகழ்வு பணிகள் இன்றையதினம்  முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி T. பிரதீபன் முன்னிலையில் இடம்பெற்றன.

இதன்போது இன்றையதினம் 13 எலும்புக் கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் மேலதிக அகழ்வுப் பணிகளுக்காகத் தற்காலிகமாக அனைத்துப் பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.