Breaking News

நடிகர் விஜய்யை காண குவிந்த ரசிகர்களால் பரபரப்பு!

 


விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தில் இடம்பெற்ற "நா ரெடி" பாடலை விஜய்யின் பிறந்தநாளையொட்டி வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 'லியோ' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஆந்திர மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இப்பகுதிகளில் அதிகமான விஜய் ரசிகர்கள் சூந்துள்ளனர். 

ரசிகர்களை காண்பதற்காக விஜய், கேரவனில் இருந்து வெளியே வந்து கையசைத்து அவர்களை உற்சாகப்படுத்தினார். இதைத்தொடர்ந்து ரசிகர்கள் விஜய்யை சூழ்ந்து கொண்டதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. அப்போது ஆந்திர போலீசார் விஜய்யின் பாதுகாப்பை கருதி ரசிகர்களை கட்டுப்படுத்தினர்.