Breaking News

சென்னை கிரிக்கெட் அணியின் பெயரை டைட்டிலாக்குக்கிறாராவெங்கட் பிரபு?

 


விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. விஜய்க்கு 68-வது படமான இப்படத்தில் நடிக்கும் கதாநாயகி மற்றும் இதர நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

இதையடுத்து இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க எஸ்.ஜே.சூர்யாவிடம் பேசி வருவதாக தகவல் வெளியானது. சமீபத்தில், விஜய்யின் 68-வது படம் குடும்ப படமாகவும் அப்பா-மகன் உறவுக்கிடையேயுள்ள கருத்து வேறுபாடை மையமாக வைத்து உருவாக்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டது. 

இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, வெங்கட்பிரபு படக்குழுவினரோடு சென்னை கடற்கரை அருகில் இருக்கும் ஓட்டலில் கதை விவாதத்தில் ஈடுபட்ட போது படத்தின் தலைப்பை 'சி.எஸ்.கே' என்று வைக்கலாம் என்று ஆலோசித்திருக்கிறார்கள். இதனை விஜய் அனுமதி பெற்ற பிறகு முறைப்படி அறிவிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவலால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.