Breaking News

வாராந்தம் 2,500 க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிப்பு!

 


நாடளாவிய ரீதியில் வாராந்தம் 2,500 க்கும் மேற்பட்டோர் டெங்கு நோயினால் பாதிக்கப்படுவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதேசமயம் கடந்த சில வருடங்களுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு அதிகளவிளான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் எனவும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.