Breaking News

ரூ.16.5 லட்சத்தில் நாய்க்கு வீடு கட்டி பரிசளித்த யூடியூபர்!

 


சொந்த வீடு கட்ட வேண்டும் என்பதே பலருக்கும் கனவாக இருக்கும் நிலையில் அமெரிக்காவில் பிரபல யூடியூபர் ஒருவர் தனது செல்லப் பிராணிக்கு ரூ.16.5 லட்சத்தில் வீடு கட்டி கொடுத்துள்ளார்.

 அவரது பெயர் ப்ரெண்ட் ரிவேரா. நாய்கள் மீது பிரியமாக இருக்கும் ப்ரெண்ட் ரிவேரா வளர்த்து வந்த பேக்கர் என்ற நாய் இறந்து போனது. இதனால் வேதனையில் இருந்த அவர் அடுத்ததாக சார்லி என்ற பெயரில் ஒரு நாயை வளர்த்தார். 

இந்நிலையில் சார்லியின் முதல் பிறந்தநாளை முன்னிட்டு ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும் என கருதிய அவர் தனது நண்பர்களிடம் ஆலோசனை கேட்டார். அதன்படி நாய் சார்லிக்கு ஒரு சொகுசு வீட்டை கட்டும் பணியில் ஈடுபட்டார்.

 தனது வீட்டிற்கு அருகிலேயே நாய் சார்லிக்கும் வீட்டை கட்டினார். அந்த வீட்டில் மனிதர்கள் பயன்படுத்தும் டி.வி., சோபா, மெத்தை, பிரிட்ஜ், தலையணைகள் என அனைத்தும் உள்ளன. வீட்டிற்கு வெளியே இது சார்லியின் வீடு என்ற பலகையும் வைக்கப்பட்டுள்ளது. வீட்டில் சார்லி மற்றும் ப்ரெண்ட் ரிவேரா இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.