கடன் உச்சவரம்பு மசோதாவில் கையெழுத்திட்டார் ஜோ பைடன்!
அமெரிக்காவின் கடன் சுமையை குறைக்க கடன் உச்சவரம்பை உயர்த்த வழிவகுக்கும் திருத்த மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. இந்த மசோதா பிரதிநிதிகள் சபையில் குடியரசு, ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவுக்கு மத்தியில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து செனட் சபை (மக்களைவை)-க்கு இந்த மசோதா கொண்டு வரப்பட்டது. அங்கேயும் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த மசோதாவில் அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார். இதன்மூலம் அடுத்த அதிபர் தேர்தல் வரை அமெரிக்கா நிர்வாக செலவினங்களுக்காக கடனை பெற முடியும்.
உலகின் வல்லரசாக திகழும் அமெரிக்காவிடமே செலவு செய்ய பணம் இல்லையா? என்ற கேள்வி அனைவரது புருவத்தையும் உயர்த்தியுள்ளது. ஒரு நாட்டின் மொத்த உற்பத்தி (GDP)-யில் இருந்து குறிப்பிட்ட அளவிற்கு கடன்கள் பெற முடியும். வல்லரசான அமெரிக்காவும் கடன் பெற்றுதான் நிர்வாகத்த நடத்துகிறது.
அமெரிக்கா 31.4 டிரில்லியன் டாலர் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் தற்போது அதையும்விட அதிக பணம் தேவைப்படுவதால் கையிருப்பு பணம் வெகுவாக குறைந்துள்ளது. கடன் வாங்க முடியாவிடில் இலங்கை சிக்கி தவித்தது போன்றும், தற்போது பாகிஸ்தான் பொருளாதா சிக்கலில் தவிப்பது போன்ற சூழலும் ஏற்படும்.
இதனால்தான் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் ஒருங்கிணைந்து கடன் உச்சவரம்பை நீக்கும் திருத்த மசோதாவிற்கு சம்மதம் தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் மொத்த உற்பத்தி 26.85 டிரில்லியன் டாலர் என கூறப்படுகிறது. ஆனால், 31.4 டிரில்லியன் வரை கடன் பெறலாம் என்பதால், உற்பத்தியை விட அதிக கடன் வாங்க வேண்டிய நிலை உள்ளது.
இந்த கடன் தற்போது உயர்த்தியுள்ளதால் அமெரிக்காவின் கடன் சுமை மேலும் உயரும். எதிர்க்கட்சிகள் செலவினங்களை குறைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் இதுபோன்று உச்சவரம்பை அடிக்கடி உயர்த்தப்பட்டுள்ளது. 2025-ல் அதிபர் தேர்தல் வருவதால் எதிர்க்கட்சிகள் கடும் நெருக்கடி கொடுக்கும் நிலை உருவாகியுள்ளது
அமெரிக்காவின் இந்த நிலைக்கு கொரோனா வைரஸ் தொற்றுதான் காரணம். அப்போது பொருளாதாரத்தை சீரமைக்க பல்வேறு சலுகைகளுக்காக பணத்தை செலவிட நேரிட்டது. மேலும், பணவீக்கத்தை கட்டுப்படுத்த குறுகிய காலத்தில் அமெரிக்காவின் பெடரல் வங்கி வட்டி விகிதத்தை கணிசமாக உயர்த்தியது. இதனால் அமெரிக்காவின் சில வங்கிகள் திவால் ஆகிவிட்டன. இதுவும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.