அரச காணிகள் தொடர்பாக புதிய திட்டம்!
அரச காணிகளை அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக விடுவிக்கும் புதிய திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக காணி சீர்திருத்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் 15 நாட்களில் அதற்கான புதிய திட்டமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைவர் நிலந்த விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
நில அளவைப் பணிகளை நிறைவு செய்த தமது ஆணைக்குழுவின் கீழ்வரும் 57 ஆயிரம் காணிகளுக்கு காணி உறுதிகள் வழங்கப்படவுள்ளதாகவும் நிலந்த விஜேசிங்க தெரிவித்துள்ளார்.