பொழுதுபோக்கிற்காக தினமும் ரூ.70 லட்சம் வரை செலவு செய்யும் துபாய் கோடீஸ்வரி பெண்
இங்கிலாந்து நாட்டின் சசெக்ஸ் நகரில் பிறந்தவர் சௌதி. இவர் தனது 6 வயதில் துபாய் நாட்டுக்கு சென்றார். பின்னர் அவர் அங்குள்ள பல்கலைக்கழகத்தில் பயின்றார். அப்போது அவருக்கும், சவுதி அரேபியா நாட்டை சேர்ந்த ஜமால் பின் நடக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறி அவரையே திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. தற்போது அவர்கள் கற்பனைக்கு எட்டாத ஆடம்பரமான வாழ்க்கை முறையில் ஒன்றாக உலகம் சுற்றி வருகிறார்கள். கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்த சௌதியின் விருப்பம் பொழுதுபோக்கு ஒன்று மட்டுமே.
இதற்காக அவர் நாள் ஒன்றுக்கு ரூ.70 லட்சம் வரை செலவு செய்கிறார். ஷாப்பிங் செல்வதில் அதிக நாட்டம் கொண்ட சௌதி தனது கிரெடிட் கார்டுகள் மூலம் விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது, ஊர் சுற்றுவது என கழித்து வருகிறார்.
அதனை ஊக்குவிக்கும் வகையில் கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனங்களும் உங்கள் ஷாப்பிங்கிற்கு வானமே உச்சம் என்று தெரிவித்துள்ளது. துபாயைச் சேர்ந்த இந்த இல்லத்தரசி, ஷாப்பிங், உணவு, பயணம் என ஆடம்பரமாக செலவு செய்வதை இன்றளவும் வாடிக்கையாக கொண்டுள்ளார்.
டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராமில் மில்லியன் கணக்கான பின் தொடர்பாளர்கள் இவருக்கு பின்னால் இருக்கிறார்கள். இதையும் படியுங்கள்: மெக்சிகோவில் மனித உடல் உறுப்புகளுடன் 45 பைகள் கண்டெடுப்பு- போலீஸ் விசாரணை அதுமட்டுமின்றி சமூக ஊடகங்களில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ளவும் அவர் தயங்கவில்லை.
ஏராமான வீடியோக்களை நாள்தோறும் பகிர்ந்து வரும் சௌதி தனது ஷாப்பிங்கில் அதிக அளவில் டிசைனர் பைகள், பளிச்சிடும் புத்தம் புதிய கார்கள் உள்ளிட்ட ஆடம்பரமான பொருட்களை அதிக அளவில் வாங்கி குவித்து வருகிறார்.
சௌதியும் அவரது கணவரும் கவர்ச்சியான மற்றும் ஆடம்பரமான முறையில் விடுமுறை நாட்களில் ஒன்றாகப் பயணம் செய்து வருகின்றனர். அவரது இந்த வசீகரமாக வாழ்க்கை முறைக்கு கணவரும் முழு ஒத்துழைப்பு வழங்கி வருவது துபாய் நாட்டில் பேசும் பொருளாகி இருக்கிறது.
இந்த ஜோடி சமீபத்தில் மாலத்தீவிற்கு சுற்றுப்பயணம் சென்றபோது அவர்களை அடையாளம் கண்டுகொண்ட பலர் அதிசயத்துடன் பார்த்து புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். அதேபோல் இந்த கோடீஸ்வர தம்பதி அடிக்கடி சீஷெல்ஸ் தீவு, லண்டனுக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
அடுத்ததாக விரைவில் ஜப்பான் செல்ல விருப்பம் தெரிவித்துள்ள சௌதி தனக்குப் பிடித்த ஆடைகள் வடிவமைப்பாளர்கள் டியோர் என்றும், அவரது கணவர் ஹெர்ம்ஸை விரும்புவதாகவும் கூறியுள்ளார். இந்த ஜோடி தங்களுக்கு பொருந்தக்கூடிய கார்களை விரும்பும் போதெல்லாம் வாங்கி வருகிறது.
இதுபற்றி சௌதி கூறுகையில், ஷாப்பிங் மீதான எனது அன்பைப் பகிர்ந்து கொள்ளும் போது, டிசைனர் உடைகள் மற்றும் கை நகங்களை அழகுபடுத்தும் ரகங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பேன். இதற்காக ஒவ்வொரு பயணத்திற்கும் எளிதாக ரூ.14 முதல் ரூ.15 லட்சம் வரை செலவழிக்க முடியும். இதன் மூலம் எனது ஆடம்பரமான வாழ்க்கை நகர்ந்து வருகிறது. அதில் ஆடம்பரமான உணவு அனுபவங்கள், நேர்த்தியான ஆடைகள் மற்றும் விலையுயர்ந்த பரிசுகளும் அடங்கும் என்றார்.