ஸ்காட்லாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் இலங்கை அணி வெற்றி!
ஸ்காட்லாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் இலங்கை அணி 82 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றியுடன் உலகக் கிண்ண தகுதிச் சுற்றின் அனைத்து ஆரம்பப் போட்டிகளையும் இலங்கை அணி தோல்வியின்றி நிறைவு செய்துள்ளது.
246 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு களம் இறங்கிய ஸ்காட்லாந்து அணி 29 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 163 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
ஸ்காட்லாந்து அணி சார்பில் Chris Greaves ஆட்டமிழக்காது 56 ஓட்டங்களை பெற்றார்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Maheesh Theekshana, 41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
முன்னதாக, இலங்கை அணி 49.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 245 ஓட்டங்களை பெற்றது.
இலங்கை அணி சாா்பில் Pathum Nissanka அதிகபட்சமாக 75 ஓட்டங்களை பெற்று கொடுத்ததுடன் Charith Asalanka 63 ஓட்டங்களை பெற்றுக்கொண்டாா்.
ஸ்கொட்லாந்து அணி சாா்பில் பந்து வீச்சில் Chris Greaves 32 ஓட்டங்களை கொடுத்து 4 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.