செர்பியா நாட்டின் பெல்கிரேட் பகுதியில் பள்ளியில் துப்பாக்கி சூடு - ஒன்பது பேர் உயிரிழப்பு!
செர்பியா நாட்டின் பெல்கிரேட் பகுதியில் உள்ள பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் சிக்கி எட்டு குழந்தைகள் மற்றும் காவலர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக 14 வயது சிறுவனை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
14 வயது சிறுவன் தனது தந்தையின் துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கி சூடு நடத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. செர்பியா தலைநகரில் உள்ள வர்ச்சர் பகுதியில் இயங்கி வரும் பள்ளியில் துப்பாக்கி சூடு நடைபெற்றது.
எட்டு குழந்தைகள் உள்பட மொத்தம் ஒன்பது பேர் உயிரிழந்த நிலையில், ஆறு மாணவர்கள் மற்றும் ஆசிரியர் காயமுற்றனர். துப்பாக்கி சூடு ஐந்து நிமிடங்கள் வரை நடைபெற்று இருக்கிறது.
போலீசார், அவசர கால மீட்பு படையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். படிப்பில் நல்ல கவனம் செலுத்தி வந்த மாணவர் போதை பழக்கத்தில் இவ்வாறு செய்திருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.