விஜய்யின் 68-வது படத்தில் வில்லன் ? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார்.
இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் என திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தை தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
தற்காலிகமாக 'தளபதி 68' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் 2024 ஆண்டு வெளியாகவுள்ளது. விஜய் -எஸ்.ஜே.சூர்யா இந்நிலையில், இப்படத்தின் வில்லன் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் இதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த தகவலானது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் எஸ்.ஜே.சூர்யா வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான 'மாநாடு' திரைப்படத்திலும் விஜய்யின் 'மெர்சல்' திரைப்படத்திலும் வில்லனாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.