Breaking News

இறுதி நாளான வெசாக் தினத்தில் யாழில் போராட்டம்!

 


யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு தையிட்டியில் சட்டவிரேதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தி இறுதிநாளான வெசாக் தினத்தில் இன்று காலை போராட்டம் ஆரம்பித்துள்ளது.

மழைக்கு மத்தியிலும் போராட்டகாரர்கள் பதாகைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை தையிட்டி விகாரையில் வெசாக் தினத்தை முன்னிட்டு பௌத்த கொடிகள் பறக்கவிடப்பட்டு விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

14 குடும்பங்களுக்கு சொந்தமான அண்ணளவாக 100 பரப்பு காணியை விடுவிக்க கோரியும் சட்டவிரோதமாக கட்டப்பட்ட பௌத்தக் கட்டுமானத்தை அகற்றக் கோரியும் பௌத்தமயமாக்கல் திணிப்பை எதிர்த்தும் போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சட்டவிரோதமாக கட்டப்பட்ட தையிட்டி விகாரையை அகற்றுமாறு கோரி கடந்த புதன்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், அதனை தொடரச்சியாக 3 நாட்களுக்கு முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது.