Breaking News

லாஃப் எரிவாயு நிறுவனத்தின் அறிவிப்பு!

 


லாஃப் சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட மாட்டாது என லாஃப் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக சந்தையில் எரிவாயு விலைகள் அதிகரித்த போதிலும், லாஃப் எரிவாயு உற்பத்திகளின் விலையை அதிகரிக்கப் போவதில்லை என்றும் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இன்று (3) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் சமையில் எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி 12.5 கிலோ கிராம் கொண்ட வீட்டு சமையல் எரிவாயு ஒன்றின் விலையை 100 ரூபாவால் குறைக்க லிட்ரோ கேஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய 12.5 கிலோ கிராம் கொண்ட வீட்டு சமையல் எரிவாயு ஒன்றின் புதிய விலை 3,638 ரூபாவாகும்.

இதேவேளை, 5 கிலோ கிராம் கொண்ட வீட்டு சமையல் எரிவாயு ஒன்றின் விலையை 40 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,462 ரூபாவாகும்.

2.3 கிலோ கிராம் கொண்ட வீட்டு சமையல் எரிவாயு 19 ரூபாவால் குறைக்கப்பட்ட நிலையில் அதன் புதிய விலை 681 ரூபாவாகும்.