4 சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்!
மின்சாரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சேவைகளான பெற்றோலிய பொருட்கள், எரிபொருளின் விநியோகம் மற்றும் சுகாதார சேவைகள் மீண்டும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் கீழ் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் நேற்று (17) வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலில் இது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி முன்னதாக, 2022 ஒகஸ்ட் 3, 2022 செப்டெம்பர் 3, 2022 ஒக்டோபர் 4, 2023 ஜனவரி 3, 2023 பெப்ரவரி 17ஆகிய திகதிகளில் இந்த சேவைகள் அத்தியாவசியமானது என்று அறிவித்து, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.