Breaking News

தேர்தலில் போட்டியிடும் அரசு ஊழியர்களுக்கான அறிவிப்பு!

 


உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை சமர்ப்பித்த அரச ஊழியர்கள் தாங்கள் போட்டியிடும் பகுதியை தவிர அருகிலுள்ள வேறு உள்ளூராட்சிப் பகுதிகளில் பணியாற்றுவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் உள்ளது.

அரச நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர நேற்று விடுத்துள்ள அறிக்கையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் வழங்குவது தொடர்பான பரிந்துரைகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதன்படி உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தேவையான அறிவுறுத்தல்கள் மாகாண ஆளுநர்கள் ஊடாக அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர குறிப்பிட்டுள்ளார்.