Breaking News

கவினுடன் முதல் முறையாக இணைந்த அனிருத்!

 


தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் சதீஷ், முதல் முறையாக இயக்குனராக அறிமுகமாகிறார். டாடா பட வெற்றியை தொடர்ந்து கவின் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். 

பெயரிடப்படாத இப்படத்தில் அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்க ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார். இப்படத்தின் மூலம் அனிருத் முதல் முறையாக கவினுடன் இணைந்துள்ளார். 

இப்படத்திற்கு ஹரீஷ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை ஆர்சி பிரனவ் கவனிக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது. 

இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் நடைபெறவுள்ளது. இப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.