நியூ கலிடோனியா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை!
பசிபிக் பெருங்கடலில் உள்ள நியூ கலிடோனியா தீவை இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியது. 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவு கோலில் 7.7 புள்ளிகளாக இது பதிவானதாக அமெரிக்க நிலநடுக்கவியல் துறை தெரிவித்து உள்ளது. நிலநடுக்கத்தையடுத்து நியூ கலிடோனியா மற்றும் பிஜூ தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரம் உடனடியாக தெரியவில்லை.