அம்பானி வீட்டு கட்டிடத்தை திறந்து வைத்த ரஜினிகாந்த்!
இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். திரைப்பிரபலங்கள் பலர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதைத்தொடர்ந்து லைகா தயாரிப்பில் மகள் ஐஸ்வர்யா இயக்கி வரும் 'லால் சலாம்' திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். ரஜினி -சவுந்தர்யா இவ்வாறு பல படங்களில் பிசியாக நடித்து வரும் ரஜினி சமீபத்தில் மும்பைக்கு விமானத்தில் பறந்தார்.
அதாவது, அம்பானியின் மனைவி நிதா அம்பானி மும்பையில் கலாச்சார மைய கட்டிடம் ஒன்றை கட்டியுள்ளார். இதனை நடிகர் ரஜினிகாந்த் திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியின் போது மகள் சவுந்தர்யாவும் உடன் இருந்தார். இது தொடர்பான புகைப்படத்தை அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.