தேசிய அரசாங்கத்திற்கு ஜனாதிபதி அழைப்பு?
தேசிய அரசாங்கத்திற்கான அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தாம் உட்பட பல கட்சி பிரதிநிதிகளை ஜனாதிபதி ஏற்கனவே அழைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன் பிரகாரம், இது தொடர்பில் கலந்துரையாடி தீர்மானம் எடுப்பார் என எதிர்ப்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையில் தேர்தலை இலக்கு வைத்து அரசாங்கத்தை பலப்படுத்தும் நோக்கில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு தந்திரோபாயங்களின் ஊடாக அரசாங்கத்துடன் இணைத்துக் கொள்ள செயற்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.