Breaking News

அனைத்து அரச நிறுவனங்களையும் கோப் குழு முன் அழைக்க தீர்மானம்!

 


அனைத்து அரச நிறுவனங்களையும் கோப் குழு முன்னிலையில் அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.

அதன்படி 420 அரச நிறுவனங்களை கோப் குழு முன் அழைக்க தீர்மானித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையின் பிரகாரம், வருடாந்தம் அரச நிறுவனங்களை கோப் குழுவின் முன் அழைக்க வேண்டும் என்ற போதிலும், அது சரியான முறையில் செய்யப்படுவதில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஏப்ரல் மாதத்தில் மேலும் 04 அரச நிறுவனங்கள் கோப் குழு முன்னிலையில் அழைக்கப்படவுள்ளன.

இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனம், காணி சீர்திருத்த ஆணைக்குழு, இலங்கை விமான சேவை மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு என்பன கோப் குழுவின் முன்னிலையில் அழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.