ருத்ரன் இசை வெளியீட்டு விழாவில் நெகிழ்ச்சி.. ராகவா லாரன்ஸின் புதிய முயற்சி!
ராகவா லாரன்ஸ் தற்போது நடித்திருக்கும் படம் ருத்ரன். இப்படத்தின் மூலம் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகிறார். இதில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். ருத்ரன் இசை வெளியீட்டு விழா இப்படம் வருகிற 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், 'ருத்ரன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் நடிகர் ராகவா லாரன்ஸ் 150 குழந்தைகளை தத்தெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "150 குழந்தைகளை தத்தெடுத்து அவர்களுக்கு கல்வியை புதிய முயற்சியாக வழங்குவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
உங்கள் அனைவரின் ஆசியும் எனக்கு வேண்டும்" என்று புகைப்படத்தை பகிர்ந்து பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.