Breaking News

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் பொதுமக்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்துவதற்கு வழிவகுக்கும் என எச்சரிக்கை!

 


பொதுமக்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்துவதற்கு உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பயன்படுத்தப்படலாம் என பேராசிரியர் ஜயதேவ உயாங்கொட தெரிவித்துள்ளார்.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அரசாங்கம் சுமைகளை நலிந்தவர்கள், உழைக்கும் மக்கள், தொழிலாளர்கள் மீது சுமத்துகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக நாட்டில் பாரதூரமான சமூக நெருக்கடிகள் உருவாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஆளும் தரப்பு தற்போது மக்களால் முன்னெடுக்கப்படும்  ஆர்ப்பாட்டங்களை ஒடுக்க விரும்புகின்றது எனவும் பேராசிரியர் ஜயதேவ உயாங்கொட தெரிவித்துள்ளார்.

அதிருப்தியாளர்களை ஒடுக்குவதற்காக அரசாங்கம்  பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை பயன்படுத்தும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.