க.பொ.த சாதாரண தர பரீட்சை திட்டமிட்டவாறு நடத்தப்படும்?
க.பொ.த சாதாரண தர பரீட்சை திட்டமிட்டவாறு மே 29ஆம் திகதி ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்கிழமை) கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உயர்தர பரீட்சையின் 10 விடைத்தாள்களின் மதிப்பீடு செய்வதற்காக விரிவுரையாளர்கள் நேற்று பணியை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.