சிரியாவில் அமெரிக்க படைகள் அதிரடி தாக்குதல்: ஐ.எஸ். தலைவர் பலி!
சிரியாவின் வடக்கு பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவராக அப்த்-அல் ஹாடி மக்மூத் அல்-ஹாஜி அலி பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அங்குள்ள அமெரிக்க படையினர் ஹெலிகாப்டரில் சென்று தாக்குதல் நடத்தினர்.
இதில் ஐ.எஸ். தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இவர் மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பியாவில் பயங்கரவாத தாக்குதல்களை திட்டமிடுவதற்கு தலைவராக செயல்பட்டு வந்தார் என்று அமெரிக்க மத்திய படைப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகளை ஐஎஸ் அமைப்பினர் கடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தெரிவித்ததைத் தொடர்ந்து நேற்று இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், ஐஎஸ் தலைவருடன் அந்த அமைப்பைச் சேர்ந்த மேலும் இரண்டு நபர்கள் கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.