Breaking News

பேக்கரி பொருட்களின் விலை எதிர்வரும் வாரத்தில் அறிவிக்கப்படும் -அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம்!

 


பேக்கரி பொருட்களின் விலை எதிர்வரும் வாரத்தில் அறிவிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

230 ரூபாயாக ஒரு கிலோ கோதுமை மாவின் விலை தற்போது 210 ரூபாயாக குறைந்துள்ள போதிலும், பேக்கரி தொடர்பான உணவுப் பொருட்களின் விலைகளில் குறையவில்லை.

இந்நிலையிலேயே விலை குறித்து அடுத்த வாரமளவில் அறிவிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன கூறியுள்ளார்.