Breaking News

ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் 35.3 சதவீதமாக வீழ்ச்சி!

 


கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் 35.3 சதவீதமாக குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த சுட்டெண்ணின் படி, மார்ச் மாதத்தில் பணவீக்கம் 50.3 சதவீதமாக பதிவாகி இருந்தது.

மார்ச் மாதத்தில் 50.3 சதவீதமாக இருந்த உணவு வகை பணவீக்கம், ஏப்ரலில் 30.6 சதவீதமாக குறைந்துள்ளது.

மார்ச் மாதத்தில் 51.7 சதவீதமாக இருந்த உணவு அல்லாத பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 37.6 சதவீதமாக குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.