Breaking News

இலங்கையில் உதயமாகும் புதிய அரசியல் கட்சி!

 


அடுத்த மாதம் புதிய அரசியல் கட்சியை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

பதுளை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ´ஜாதிக ஜனரஜ பெரமுன´ என பெயரிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

அடுத்த மே மாதம், நாட்டில் புதிய அரசியல் கட்சி ஸ்தாபிக்கப்படும், ஏனெனில் இந்த நாட்டை இந்த திவால் நிலையிலிருந்து காப்பாற்ற, தகுதி அடிப்படையிலான அரசியல் கட்சி தேவை. மேலும், குடும்ப பரம்பரை அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சோசலிசம் மற்றும் முதலாளித்துவத்திற்கு பதிலாக புதிய நடைமுறைவாதத்தில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல அரசியல் சித்தாந்தம் வேண்டும். அதை மே மாதம் வெளிக்கொணருவோம். அதுவே ´ஜாதிக ஜனரஜ பெரமுன´ எனவும் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.