பெற்றோர்களுக்கு வைத்தியர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!
வெப்பத்தினால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதகமான விளைவுகளைத் தவிர்ப்பதில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டுமென ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
அதிக திரவங்களை குடிப்பது வெப்பமான காலநிலையிலிருந்து சிக்கல்களைக் குறைக்க உதவும் என்று அவர் கூறுகிறார்.
மேலும் இன்றைய நாட்களில் தோல் நோய்கள் அதிகரித்து வருவதாகவும், சிறிய குழந்தைகள் கூட தினமும் இரு வேளை குளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.