Breaking News

ஜனாதிபதி ஆசிரியர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

 


அடுத்த வாரத்திற்குள் ஆசிரியர்கள் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபட இணக்கப்பாட்டுக்கு வர மறுத்தால் அவசரச் சட்டத்தின் கீழ் கல்வி அத்தியாவசிய சேவையாக மாற்றப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிள்ளைகளின் கல்வியை பணயமாக எடுத்துக்கொள்ளமாட்டோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.