தண்ணீர் தானம் செய்தால் தீரும் பிரச்சனைகள்...
கோடை வெயில் மிக கடுமையான உக்கிரமாக உள்ளது. இதை அறிந்தே நம் முன்னோர்கள் இந்த சீசனில் தண்ணீர் தானம் செய்ய வேண்டும் என்று வரையறுத்து வைத்துள்ளனர்.
தானத்தில் சிறந்தது அன்னதானம் என்று சொல்வார்கள். ஆனால் அதைவிடச் சிறந்தது உதகதானம் என்னும் தண்ணீர் தானம். அதுவும் வெயில் நாட்களான சித்திரை, வைகாசி மாதங்களில் தண்ணீர் பந்தல் அமைத்து தாகத்திற்கு தண்ணீர் தருவது மிகப்பெரும் புண்ணியம் தரும்.
22-ந்தேதி முதல் அடுத்த மாதம் 19-ந்தேதி வரை அல்லது ஏதாவது 3 நாளாவது வசதியிருக்கும் அனைவரும் அவரவர் வசிக்கும் தெருவிலோ அல்லது தன் வீட்டு வாசலிலோ ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து கொண்டு தெருவில் நடந்து செல்லும் மக்களுக்கு குடிக்க தண்ணீர் தர வேண்டும்.
இது அனைத்து பாபத்தையும் போக்கி குழந்தைகளுக்கும் நன்மையை தம்.ஜாதி, மத பேதமில்லாமல் அனைத்து ஜீவராசிகளும் பயன்படுத்துமாறு தண்ணீர் பந்தல் அமைக்க வேண்டும்.
இந்த தானம் செய்பவர்களின் தந்தை, தாத்தா, அம்மா, பாட்டி முதலிய முன்னோர்கள் சந்தோஷம் அடைவார்கள் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. தண்ணீர் பந்தல் அமைக்க முடியாதவர்கள் ஒரு குடம் நிறைய தண்ணீர் எடுத்துக் கொண்டு பிரம்மா, விஷ்ணு ருத்ரர்களை நினைத்து தானம் செய்ய வேண்டும்.
இதனால் நீங்கள் விரும்பும் அனைத்தும் நிறைவேறும். இவ்வாறு கோடை காலம் முழுவதும் ஒவ்வொரு நாளும் ஒரு குடம் தண்ணீர் தானம் செய்யலாம் அல்லது பிறந்த நட்சத்திரத்தன்று ஒரு நாளாவது 12, 6, 3 என்ற எண்ணிக்கையில் குடம் தண்ணீரை ஏழைகளுக்கு தானம் செய்ய வேண்டும்.
மாலை மலர்