Breaking News

பல உயிர்களை காப்பாற்ற அர்னால்ட் செய்த செயல்.. வீடியோ பகிர்ந்த ஏ.ஆர்.ரகுமான்!

 


ஆக்ஷன் படங்களின் வரலாற்றை மாற்றிய 'டெர்மினேட்டர்' படம் மூலம் பிரபலமான அர்னால்ட் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் ஆளுநராகவும் இருந்துள்ளார். 

இவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள முக்கிய சாலையில் மிக பெரிய குழி ஏற்பட்டிருந்தை சீர் செய்ய உரிய அலுவலர்களை தொடர்பு கொண்டு தகவல் அளித்துள்ளார்.

 சாலையை சீரமைக்கும் அர்னால்ட் ஆனால், நகரின் நிர்வாகம் சார்பில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் தானே நேரடியாக களமிறங்கி சாலையில் இருந்த பள்ளத்தை சீர் செய்துள்ளார். 

இந்த சீரமைப்பு பணிகள் தொடர்பான விடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள நடிகர் அர்னால்ட், "பல வாரங்களாக கார்கள், சைக்கிள்களை சிதைத்து கொண்டிருக்கும் இந்த பள்ளத்தால் இப்பகுதி மக்கள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். நான் எனது குழுவினருடன் சென்று இந்த பள்ளத்தை சீர் செய்துள்ளேன். 

எப்போதும் புகார் கூறி கொண்டு இருக்க வேண்டாம். அதற்கு பதிலாக நீங்களே ஏதாவது செய்து விடுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார். 

இந்த வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், "இரத்த அழுத்தத்தை சரி செய்ய இது சிறந்த சிகிச்சை" என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.