Breaking News

ரஜினி பாராட்டி பேசிய தருணம் வாழ்க்கை முழுமை அடைஞ்சதா உணர்கிறேன்.. சூரி நெகிழ்ச்சி!

 

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த மார்ச் 31-ந்தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'விடுதலை-1'. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

  மேலும், இப்படத்திற்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, விடுதலை திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள நடிகர் சூரி பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார். 

 அதில், 'இதுவரை கிடைத்த வாழ்த்துகளுக்கு சிகரமாக வந்தது தலைவர் சூப்பர் ஸ்டாரின் வாழ்த்து. யாரை பார்த்து பிரமித்து சினிமாவிற்கு வரணும்னு நினைத்தேனோ அவர் எங்கள் படைப்பையும் உழைப்பையும் பாராட்டி பேசிய தருணம் வாழ்க்கை முழுமை அடைஞ்சதா உணர்கிறேன். 

இறைவனுக்கு நன்றி' என்று பதிவிட்டுள்ளார். இதற்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் 'விடுதலை' திரைப்படத்தை பாராட்டி பதிவை பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை கிடச்ச வாழ்த்துகளுக்கு சிகரமாக வந்தது தலைவர் சூப்பர் ஸ்டாரின் வாழ்த்து. 

யார பார்த்து பிரமிச்சு சினிமாவுக்கு வரணும்ன்னு நினச்சேனோ அவர் எங்கள் படைப்பையும் உழைப்பையும் பாராட்டி பேசிய தருணம் வாழ்க்கை முழுமை அடைஞ்சதா உணர்றேன். இறைவனுக்கு நன்றி.