விஜய் எப்ப உதவி கேட்டாலும் செய்வார் -ராகவா லாரன்ஸ் நெகிழ்ச்சி!
ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் திரைப்படம் ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படத்தின் மூலம் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.
இதில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராகவா லாரன்ஸ் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படம் முதல் நாள் வசூல் உலகளவில் சுமார் ரூ.3.5 கோடியை கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றி கலந்து கொண்ட நடிகர் ராகவா லாரன்ஸ், விஜய் குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது, எனக்கு விஜய்யோட அமைதி ரொம்ப பிடிக்கும். அதிகம் பேசமாட்டார். செயல் அதிகமா இருக்கும் வார்த்தை குறைவா இருக்கும்.
எனக்கு டிரஸ்ட்டில் சில உதவிகள் தேவைப்படும் போது எப்போ போன் பண்ணாலும் உடனே அந்த உதவி செய்வார். ராகவா லாரன்ஸ் நான் வளர்க்கும் என்னுடைய குழந்தைகள் விஜய் சார் படம் வெளியான போது படம் பாக்கனும் னு கேட்பார்கள். நான் விஜய் சாருக்கு அழைத்து இது குறித்து கேட்டேன்.
அவர் அவங்களுக்காக தனியா ஷோவே போடலாம் என்று சொன்னார். விஜய் சாருடன் நடிக்கனும்னு எழுதிருந்து அது நடந்தா.. முதல்ல சந்தோஷப்படுறது நானாதான் இருப்பேன் என்று கூறினார்.