டொலர் மற்றும் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!
இலங்கை மத்திய வங்கி இன்றையதினம் (22) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 312.61 ரூபாவாகவும் விற்பனை விலை 330.16 ரூபாவாகவும் பதிவாகி உள்ளது.
இதேவேளை, இலங்கையில் தங்கத்தின் விலையும் நேற்றைய தினத்தோடு ஒப்பிடுகையில் 10 ஆயிரம் ரூபாவால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
22 கரட் தங்கத்தின் இன்றைய விலை 151,800 ரூபாவகவும், 24 கரட் தங்கத்தின் இன்றைய விலை 165,000 ரூபாவகவும் பதிவாகியுள்ளது.