Breaking News

இயக்குனர் லோகேஷ் கனகராஜை சந்தித்தது ஏன்..? விளக்கம் கொடுத்த ஜெயம் ரவி..

 


இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் திரைப்படம் 'அகிலன்'. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

 கடந்த சில மாதங்களுக்கு முன்பு 'அகிலன்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அகிலன் இந்த படத்தில் ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் ஒரு கதாபாத்திரம் கடற்படை அதிகாரி என்றும் தகவல் வெளியானது. 

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. மேலும், இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. 

அகிலன் இந்நிலையில், நடிகர் ஜெயம் ரவி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் ஜெயம் ரவி பேசியதாவது, "மாநகரம் முடித்து விட்டு லோகேஷ் கனகராஜ் எனக்கு ஒரு கதை கூறினார்.

 சில காரணங்களால் அந்த படம் பண்ண முடியவில்லை. அவர் விக்ரம் ஷுட்டிங்கில் இருந்த போது எங்களுடைய அகிலன் படப்பிடிப்பு அங்கே நடந்தது. அப்போது எடுத்த புகைப்படம் தான் அது மற்றபடி அவர் இயக்கத்தில் நான் நடிக்கவில்லை" என்று பேசினார்.