Breaking News

தொடர் அறிவிப்புகளால் ரசிகர்களை திணறடிக்கும் பொன்னியின் செல்வன் படக்குழு!

 


மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் பொன்னியின் செல்வன்-1. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. 

இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது . 'பொன்னியின் செல்வன் -2' திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா   வருகிற 29-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இப்படத்தின் டிரைலரும் அதே நாளில் வெளியாகவுள்ளது. 

இதற்காக ஏற்பாடுகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெறும் இடம் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த நிகழ்ச்சி வருகிற 29ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் ஏ.ஆர்.ரகுமானின் இசை குறித்த கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் 7 பாடல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் அறிவிப்புகளால் படக்குழு ரசிகர்களை திணறடித்து வருவதாக ரசிகர்கள் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.